செய்திகள் :

காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் பலி! மர்ம நோயல்ல; மலேரியா நோய்தான்!

post image

காங்கோவில் பரவிவரும் மர்மநோயை மலேரியாதான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கோவில் ஒருமாத காலமாக மர்ம நோயால் பலரும் பலியாகி வந்த நிலையில், நோய்க்கான காரணத்தை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்தது. அக்டோபர் மாதத்தில் இருந்து காங்கோவில் சுமார் 600 பேர் வரையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பலியாகினர். மேலும், இந்த நோயால் 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடும் தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, 6.2 சதவிகிதம் இறப்பு விகிதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியது.

இந்த நிலையில், காங்கோவில் அதிகளவில் பரவிவரும் இந்த மர்ம நோய்க்கான விளக்கத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது. காங்கோவில் பரவி வருவது மர்ம நோயல்ல; மலேரியா நோய்தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட பலரைத்தான் இந்த நோய் தாக்கியுள்ளது. மலேரியாவும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும்தான் நோயின் தாக்கத்தை வீரியமடையச் செய்துள்ளது.

இந்த நோயால் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் பாதிக்கும் அதிகமானோர் 5 வயதுக்குள்பட்டவர்களே.

காஸா: மேலும் 38 போ் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 போ் உயிரிழந்தனா். இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸா பகுதியில் இஸ... மேலும் பார்க்க

வனுவாடூ தீவில் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்! மீட்புப் பணியில் ஆஸ்திரேலிய குழு

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள வனுவாடூ தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிலடுக்கத்தால் 14 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவ... மேலும் பார்க்க

ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்

மாஸ்கோ: புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை உள்நாட்டு ஆராய்ச்சியின் மூலம் தயாரித்திருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது.இந்த தடுப்பு மருந்தானது மனி... மேலும் பார்க்க

ஜப்பானில் ராக்கெட் ஏவும் முயற்சி 2-ஆவது முறையாக தோல்வி!

டோக்கியோ: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஒன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று(டிச.18) 5 சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவிய ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறால் விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில நிமிடங்க... மேலும் பார்க்க

500 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை எட்டினார் எலான் மஸ்க்!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 500 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெர... மேலும் பார்க்க

பூடானையும் ஆக்கிரமிக்கும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?

பூடான் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி 22 கிராமங்களில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது செய்றகைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.பூட்டானின் மேற்குப் பகுதியான டோக்லாமில் கடந்த 8 ஆண்டுகளில் ... மேலும் பார்க்க