செய்திகள் :

பூடானையும் ஆக்கிரமிக்கும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?

post image

பூடான் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி 22 கிராமங்களில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது செய்றகைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பூட்டானின் மேற்குப் பகுதியான டோக்லாமில் கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 22 கிராமங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியது மூலம் சீனா தனது எல்லையை வலுப்படுத்தியுள்ளது.

டோக்லாமில் கடந்த 2017ஆம் ஆண்டில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது, இந்திய ராணுவம் தலையிட்டு கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. சுமார் 73 நாள்கள் மோதலுக்கு பிறகு இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன.

இதையும் படிக்க : அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியது என்ன?

தற்போது பூடானின் டோக்லா எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் துணை ராணுவப் படையான சாஸ்திர சீமா பல் அந்நாட்டுப் படையுடன் இணைந்து பாதுகாத்து வருகின்றது.

ஆனால், டோக்லா பகுதிகளில் உள்ள 22 கிராமங்களை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 8 கிராமங்களை சீனப் படைகள் நிர்வகித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரதான நிலப்பரப்பை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி பகுதி அருகேவுள்ள பூடான் எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்தியுள்ளது இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் அஜித் தோவல்

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர சீனா-இந்தியா இடையே கடந்த அக்டோபரில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. தொடர்ந்து, படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு சுமூக உறவு நீடித்து வருகின்றது.

தொடர்ச்சியாக இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் சீனாவில் இன்று நடைபெறும் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பங்கேற்கும் நிலையில், பூடான் எல்லைப் பிரச்னை வெடித்துள்ளது.

500 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை எட்டினார் எலான் மஸ்க்!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 500 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெர... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனா மீதான வழக்கு: காலக் கெடு நீட்டிப்பு

வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடா்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாராணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிம... மேலும் பார்க்க

முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு

குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகாா் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ரஷிய ஊடகங... மேலும் பார்க்க

சிடோ புயல்: 64 போ் உயிரிழப்பு

தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 போ் உயிரிழந்தனா். இந்தப் புயலில் நூற்றுக்கணக்கானவா்கள் முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரி... மேலும் பார்க்க

பாக். வன்முறை: காயமடைந்தோருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம்!

பாகிஸ்தானில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், காயமடைந்தவர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன.பாகிஸ்தானிய தொண்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்... மேலும் பார்க்க

டிசம்பர் என்றாலே.. பயங்கர நிலநடுக்கம்! எப்படி இருக்கிறது வானூட்டு தீவு?

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கம் வானூட்டு தீவிலும் எதிரொலித்ததால், தீவின் பெரும்பாலான பகுதிகள் குலுங்கின.ஆஸ்திரேலியாவின் கிழக்குத் தீவுப் பகுதியான வானூட்டு தீவில், செவ்வாய்க... மேலும் பார்க்க