வனுவாடூ தீவில் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்! மீட்புப் பணியில் ஆஸ்திரேலிய குழு
நான் இந்தத் தொடரில் தேவைப்படாவிட்டால் விலகிக் கொள்கிறேன்: அஸ்வின்
இந்தியாவின் ஆல்ரவுண்டர் தமிழகத்தைச் சேர்ந்த ரவி அஸ்வின் பார்டர் - கவாஸ்கர் தொடரில் தான் தேவையில்லை எனில் விலகிக் கொள்வதாக ரோஹித் சர்மாவிடம் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்ததும், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து உடன் இந்தியா 0-3 என தோல்வியுற்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
”தேர்வுக்குழுவினால் அஸ்வின் நீக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட் அவர். அவரது முடிவினை அவரே எடுத்திருக்கிறார்” என பிசிசிஐ மூத்த உறுப்பினர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?
இந்திய அணி அடுத்து ஜூன் - ஆக. இங்கிலாந்துடன் விளையாடுகிறது. சொந்த மண்ணில் அடுத்து அக்.- நவ. இல் விளையாடுகிறது. இடையில் 10 மாதங்கள் இருக்கின்றன.
இதற்கடுத்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027-க்கான போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
முதல் டெஸ்ட்டில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். அதனால், அஸ்வின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
ரோஹித் சர்மாதான் அஸ்வினிடம் பேசி ஃபிங்க் பந்து டெஸ்ட் விளையாட கூறியதாக பத்த்ரிகையாளர் சந்திப்பில் ரோஹித் பேசியிருந்தார்.
ரோஹித் சர்மா கூறியதென்ன:
நான் பெர்த் வந்ததும் அஸ்வின் இதுகுறித்து பேசினார். நான்தான் அவரை பிங்க் பந்து கிரிக்கெட் வரை ஆடுங்கள் என்று கூறினேன். அஸ்வின் என்னிடம் நான் இந்தத் தொடரில் தேவைப்படவில்லை எனில் நான் விலகிக் கொள்கிறேன் என்றார்.
அஸ்வின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அவரை மாதிரியான ஒரு வீரர் நமக்கு எப்போதும் தேவை. இந்த முடிவினை அவரே எடுத்துள்ளார்.
இது குறித்து அஸ்வின் நிச்சயமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவார் என்றார்.