செய்திகள் :

எனக்கு பயமில்லை... அஸ்வின் தலைசிறந்தவர்: ஆஸி. கேப்டன் அதிரடி!

post image

பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்தது இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை என ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுத்தது.

ஆஸி. அணி 2-வது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2.1 ஓவர்கள் விளையாடியபோது மோசமான வானிலையைத் தொடர்ந்து மழையினால் போட்டி சமனில் முடிந்தது.

இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

எனக்கு பயமில்லை

போட்டியின் போக்கு இந்தியாவின் பக்கம் சென்றதாக நான் நினைக்கவில்லை. உத்வேகம் குறித்த எந்த பயமும் எனக்கு இல்லை. இந்த வாரத்தில் நாங்கள் நிறையவே எடுத்துக்கொள்வோம்.

சில சிறந்த பார்ட்னர்ஷிப்கள் அமைந்தது 450 (445) ரன்களை குவித்துள்ளோம். 250இல் (260) இந்தியாவை ஆட்டமிழக்க வைத்துள்ளோம். அதனால் இந்த வாரத்தில் பல நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வோம்.

5 நாளில் காற்று, மழையில் அதிகமாக பாதிக்கப்பட்டோம். அது வெறுப்பாக இருந்தது.

அஸ்வின் தலைசிறந்தவர்

அஸ்வின் ஓய்வு ஆச்சரியமாக இருந்தது. உலகம் முழுவதும் சிறப்பாக விளையாடியுள்ளார். சுழல்பந்து வீச்சாளர்கள் அவர்மாதிரி நீண்டநாள் விளையாடுவதில்லை. தலைசிறந்த வீரர் அவர். இந்தியா, ஆஸி.யில் அவர் எங்களுக்கு மிகச் சவலான பந்துவீச்சாளராக இருந்துள்ளார். எங்களது அணியில் அவர்மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

ஹேசில்வுட் விலகல், ஹெட் விளையாடுவார்

ஹேசில்வுட் தொடரிலிருந்து விலகுகிறார். நாங்கள் அவரை மதிக்கிறோம். அவரது பங்கு எங்களது அணிக்கு முக்கியம்.

ஹெட் விளையாடுவார். ஆஸி.யில் டாப் 3 இல் விளையாடுவது கடினம். ஆடுகளம் கடினமானதாக இருக்கும். மெக்ஸ்வீனி நன்றாக விளையாடினார். இன்றும் நன்றாகவே விளையாடினார்.

அவர் விரும்பிய ரன்களை குவிக்காமல் இருந்தாலும் சில முக்கியமான நேரங்களில் நன்றாக விளையாடியுள்ளார் என்றார்.

உண்மையான மகத்துவம்..! அஸ்வின் குறித்து சச்சின் புகழாரம்!

தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு குறித்து சச்சின் மனதும் மூளையும் ஒன்றிணைந்து நீங்கள் போட்டியை அணுகும்விதம் குறித்து நான் எப்போதும் பிரமித்திருக்கிறேன் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். மழையின் காரணமாக பிர... மேலும் பார்க்க

தோனி போல திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்..! முன்னாள் வீரர் விமர்சனம்!

தோனியை போலவே தொடருக்கு இடையில் தனது ஓய்வை அஸ்வின் அறிவித்திருக்கக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 38 வயதாகும் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தத... மேலும் பார்க்க

நான் இந்தத் தொடரில் தேவைப்படாவிட்டால் விலகிக் கொள்கிறேன்: அஸ்வின்

இந்தியாவின் ஆல்ரவுண்டர் தமிழகத்தைச் சேர்ந்த ரவி அஸ்வின் பார்டர் - கவாஸ்கர் தொடரில் தான் தேவையில்லை எனில் விலகிக் கொள்வதாக ரோஹித் சர்மாவிடம் தெரிவித்துள்ளார்.பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்ததும், இந்தி... மேலும் பார்க்க

3ஆவது இடத்தில் இந்தியா: டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

பிரிஸ்பேனில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி மழை சமனில் முடிந்தது. இந்திய அணி டபிள்யூடிசி தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது. டபிள்யூடிசி (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) இறுதிப் ... மேலும் பார்க்க

டிராவிஸ் ஹெட் காயம்! 4-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருவதால், 4-வது போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - ஆஸ்... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார் மேலும் பார்க்க