“சிறுபான்மையினருக்கு அரணாக உறுதியாக நிற்போம்!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்
வதந்திகளை நம்பாதீர்கள்..! பிரபாஸ் பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!
நடிகர் பிரபாஸ் நடித்துவரும் புதிய படத்தினை குறித்த வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாமென தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.
சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. சமீபத்தில் வெளியான கல்கி 2989 ஆயிரம் கோடி வசூலித்து அசத்தியது.
தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிக்கும் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
வதந்திகளை நம்பாதீர்கள்
இந்தப் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அறிக்கை வெளியிட்டு கூறியதாவது:
தி ராஜா சாப் படத்தின் படப்பிடிப்பு இரவுப் பகலாக நடந்து வருகிறது. 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
படத்தின் டீசர் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கான என பல செய்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளை நம்பாதீர்கள். சரியான நேரத்தில் நாங்கள் தகவலை தெரிவிப்போம்.
டீசர் விரைவில் வெளியாகி உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை மருதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
இந்தப் படம் அடுத்தாண்டு ஏப்.10ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, இந்தப் படத்தின் டீசர் அக்.23ஆம் தேதி வெளிவருமென கூறப்பட்டிருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு அனிமல் பட இயக்குநர் உடன் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.