விஜய் சேதுபதியுடன் ரோஜா தொடர் நாயகன்! புதிய படமா?
ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன், நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ரோஜா தொடர் முடிந்த பிறகு வேறு எந்தவொரு தொடர்களிலும் சிபு சூர்யன் நடிக்க ஒப்பந்தமாகாத நிலையில், விஜய் சேதுபதி உடனான புகைப்படத்தைப் பகிர்ந்ததால், அவருடன் படத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நாயகனாக நடித்தவர் சிபு சூர்யன். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இவர்களுக்கு இடையிலான காட்சிகள் இளம் தலைமுறை ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
ரோஜா தொடர் 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பானது. அந்த காலகட்டத்தில் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்ததால், பலரின் கவனத்தையும் ரோஜா தொடர் ஈர்த்தது.
ரோஜா தொடருக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா -2 தொடரில் சிபு சூர்யன் நடித்தார். இந்தத் தொடர் விரைவிலேயே முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.