செய்திகள் :

Ambedkar: `கடவுள் பெயரை உச்சரித்துதான் அயோத்தியில் தோற்றீர்கள்; ஆனால் அம்பேத்கர்..' - சீமான் காட்டம்

post image
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை முன்வைத்து காங்கிரஸைச் சாடியிருப்பது அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.

``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்." என்று அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து, நாடெங்கிலும் அமித் ஷாவிற்கும், பா.ஜ.கவிற்கும் எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றன. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று நாடாளுமன்றம் முன்பு அம்பேத்கரின் புகைப்படத்தை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்தும் நாடெங்கிலும் பலவேறு அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் 'நா.த.க' ஒருங்கிணைப்பாளார் சீமான், "அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்” என்கிறார் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள். உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும்.

அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். “அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கிற பூமியில் படைக்கப் பாடுபடுகிறேன்” என்றார் பொதுவுடமைத் தத்துவத்தின் பிதாமகன் எங்கள் தாத்தா ஜீவானந்தம்.

அப்படியொரு சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் இப்போது வாழுகின்ற பூமியிலேயே தன் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் அண்ணல் அம்பேத்கர். “எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார், இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க?" என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு; `அரசியல் பேசவில்லை' - மாதுளை பழங்களை வழங்கிய சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் எப்போதும் விவசாயிகள் உரிமைக்காக மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளா... மேலும் பார்க்க

Ambedkar: "சாவர்க்கரையும் காங்கிரஸ் அவமதித்தது; என் பேச்சை..." - அமித் ஷா தரும் விளக்கம் என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறி... மேலும் பார்க்க

AMBEDKAR: சர்ச்சையைக் கிளப்பிய Amit Shah; Support-க்கு வந்த MODI | TN RAINS | DMK NTK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * அவைக்கு வராத 20க்கும் மேற்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்! * "அம்பேத்கர் பெயருக்குப் பதிலாகக் கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால் அடுத்த 7 ஜென்மத்திற்குச் சொர்க்கத்த... மேலும் பார்க்க

Ambedkar: `அம்பேத்கர் எனக்கு கடவுள்... அமித் ஷா தவறாக எதுவும் பேசவில்லை' - அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்க... மேலும் பார்க்க