1.6% பங்குகளை விற்பனை செய்த ஐபிசிஏ லேபாரட்டரீஸ் புரமோட்டர்ஸ்!
உலகக் கோப்பை நினைவுகள்..! மெஸ்ஸியின் வைரல் பதிவு!
கால்பந்து உலகக் கோப்பை வென்றதன் இரண்டாம் ஆண்டு நினைவுகள் குறித்து மெஸ்ஸி பதிவிட்டுள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 3ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
ஒரு உலகக் கோப்பையில் 5 முறை சிறந்த வீரர் விருதை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மெஸ்ஸி சிறப்பாக விளையாடி வருகிறார்.
கடைசியாக ஆர்ஜென்டினா விளையாடிய 70 போட்டிகளில் 65 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது.
கேரளாவில் மெஸ்ஸி விளையாட வருவதாக கேரள அமைச்சர் தகவல் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் மெஸ்ஸி உலகக் கோப்பையுடன் படத்தைப் பகிர்ந்து கூறியதாவது:
எனக்கு டிசம்பர் மாதமும் கிறிஸ்துமஸும் பிடிக்கும். 2 வருடம் முன்பு அந்த வருடத்தின் மோசமான மாதமாக முடிந்திருக்க வேண்டியது. ஆனால், தற்போது எனது கால்பந்து வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் அழகான மாதமாக முடிந்திருக்கிறது. தற்போது, எல்லா டிசம்பர் மாதமும் இந்த நினைவுகள் என்னிடம் வருகின்றன. அனைவருக்கும் இரண்டாவது ஆண்டு நிறைவு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.