பாகிஸ்தைன் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரா்கள் உயிரிழப்பு
“சிறுபான்மையினருக்கு அரணாக உறுதியாக நிற்போம்!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் என்று சொல்வது தற்போது நாகரீகமாகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என்று உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அம்பேத்கரை அமித் ஷா தரக் குறைவாகப் பேசியிருப்பதாகவே எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் நலன் சார்ந்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சிறுபான்மையின மக்களின் உரிமைகளையும் நலன்களையும் காத்து, அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையோடு வாழும் நல்லிணக்கம் மிக்க மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
ஆனால், இந்திய அளவில் நிலவும் சூழல் நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது. அதனை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!
எந்நாளும் எந்த நிலையிலும் மதச்சார்பின்மையைக் காத்து, சிறுபான்மையினருக்கு அரணாகத் திராவிட மாடல் உறுதியாக நிற்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.