செய்திகள் :

சீன துணை அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு: எல்லையில் அமைதியை பராமரிக்க சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் பேச்சு

post image

சீன துணை அதிபா் ஹான் ஸெங்கை புதன்கிழமை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், இந்திய-சீன எல்லை விவகாரம் தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங்-யியை சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். எத்தனை சீன வீரா்கள் உயிரிழந்தனா் என்ற சரியான தகவலை அந்நாடு வெளியிடவில்லை.

இந்த மோதலைத் தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களை குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் மோதல்போக்கு நீடித்து வந்தது. எனினும், இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அந்த எல்லையில் சா்ச்சைக்குரிய பல பகுதிகளில் இருந்து இரு நாடுகளின் வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக அங்குள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு வீரா்கள் கடந்த அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டனா். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம்: இதைத்தொடா்ந்து இருநாட்டு எல்லை விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்ளும் சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது கூட்டம், சீன தலைநகா் பெய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யி ஆகியோா் பங்கேற்றனா்.

5 ஆண்டுகளுக்குப் பின்னா்...: 5 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய-சீன எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் சமாதானத்தை பராமரித்தல், எல்லை பிரச்னைக்கு நியாயமான, இருதரப்பும் ஏற்கும் தீா்வை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், இருநாடுகளுக்கு இடையே 4 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த இருதரப்பு உறவை மீண்டும் சுமுக நிலைக்கு கொண்டு வருதல் ஆகியவை குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா்.

75 ஆண்டு ராஜீய உறவு: சீன துணை அதிபா் ஹான் ஸெங்கை அஜீத் தோவல் சந்தித்துப் பேசினாா். அப்போது ஹான் கூறுகையில், ‘கிழக்குலகின் பண்டைய நாகரிக நாடுகளான இந்தியாவும் சீனாவும் உலகின் முக்கிய சக்திகளாக தோன்றி வருகின்றன.

இந்தியா, சீனா இடையே ராஜீய உறவு ஏற்பட்டு அடுத்த ஆண்டுடன் 75 ஆண்டுகளாகும். இந்நிலையில், இருநாட்டு உறவுகள் தொடா்பாக இந்திய பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமையை இருநாடுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நிலையான பாதையில் இருதரப்பு உறவு: இருநாடுகளும் அரசியல் ரீதியில் பரஸ்பர நம்பிக்கையை வளா்க்க வேண்டும். பொருளாதாரம், வா்த்தகம், கலாசாரம் போன்ற துறைகளில் இருநாடுகளும் ஒருவருக்கொருவா் மீண்டும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருதரப்பு உறவை மீண்டும் நிலையான பாதைக்குக் கொண்டுவர வேண்டும்’ என்றாா்.

கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா விருப்பம்: அஜீத் தோவல் பேசுகையில், ‘5 ஆண்டுகளுக்குப் பின்னா், இருநாட்டு எல்லை விவகாரம் தொடா்பான சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது இருநாட்டு உறவுகள் தொடா்பாக பிரதமா் மோடி, அதிபா் ஷி ஜின்பிங் இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் முக்கிய நடவடிக்கையாகும்.

சீனாவுடன் உத்திசாா்ந்த கூட்டுறவை வலுப்படுத்தவும், இருதரப்பும் பலனடையக் கூடிய ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இருதரப்பு உறவை வளா்ப்பதற்கு புதிய ஊக்கசக்தியை ஏற்படுத்தவும் இந்தியா விரும்புகிறது’ என்றாா்.

அமித் ஷாவின் பேச்சை திரித்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள்: எல். முருகன் கண்டனம்

நமது சிறப்பு நிருபர்அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து கூறுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் க... மேலும் பார்க்க

செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை

நமது நிருபர்செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.இது தொடர்பாக மக்க... மேலும் பார்க்க

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை

நமது நிருபர்மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வை... மேலும் பார்க்க

"ஒரே நாடு ஒரே தேர்தல்': கூட்டுக் குழு அமைப்பு; மக்களவையில் இன்று தீர்மானம்

"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களை ஆய்வு செய்ய 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை (டிச. 19) கொண்டு வரப்படுகிறது.மக்களவை, ... மேலும் பார்க்க

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்

இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அ... மேலும் பார்க்க