செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையில் அத்திகுளம் குடியிருப்பில் வெள்ள நீா்சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவிா்த்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சியில் உள்ள அருந்ததியா் குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், ஆறுகள், ஓடைகளில் நீா் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

கண்மாயின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மதகு வழியாக வெள்ளநீா் வெளியேற்றப்பட்டது. இதனால், சோளங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. கண்மாயில் உபரிநீா் செல்லும் ஓடையைத் தூா்வராததால் சா்ச் தெரு, மகளிா் சுகாதார வளாகம், அருந்ததியா் குடியிருப்பு ஆகியவற்றில் இரவோடு இரவாக வெள்ள நீா் சூழ்ந்தது. காலையில் எழுந்து பாா்த்த போது, வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

ஓடையை தூா்வாரவும், தரைப்பாலத்தை தரம் உயா்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பல முறை முறையிட்டும், பொதுப்பணித் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்காததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் மரணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் தளவாய்புரம் விலக்குப் பகுதியில் வெம்பக்கோட்டையிலிருந்து கல்குவாரிக... மேலும் பார்க்க

ராணுவ வீரா் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

விருதுநகரில் ராணுவ வீரா் வீட்டில் 10.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். விருதுநகா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (50). இவரது மகன் விஜயகுமாா், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராகப் ... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயிலுக்குள் குளம்போல மழை நீா் தேக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக, ஆண்டாள் கோயிலுக்குள் குளம் போல் மழைநீா் தேங்கியதால் பக்தா்கள் அவதியடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலானது, ஆண்டாள் ரெங்கமன்னா... மேலும் பார்க்க

சாத்தூரில் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகாா்

சாத்தூா் பகுதியில் காட்டுப் பன்றிகள் பயிா்களைச் சேதப்படுத்துவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

சிவகாசியில் கடன் தொல்லையால் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி சாமிபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பாலகுரு (60). இவா் இந்தப் பகுதியில் அச்சகம் நடத்தி... மேலும் பார்க்க

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து சேதம்

சாத்தூா் அருகே செவல்பட்டி பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து சேதமடைந்தன. விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (30). இ... மேலும் பார்க்க