செய்திகள் :

கோவை: `தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதா?' - சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி!

post image

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் மாநிலத்தின் உரிமை பறிபோகவில்லை. அப்படி உரிமை பறிபோகிறது என்றால் 1971ம் ஆண்டு கருணாநிதி சட்டமன்றத்தை கலைத்துவிட்டு ஏன் நாடாளுமன்றத்துடன் தேர்தல் நடத்தினார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

இதனால் மாநில அரசின் உரிமை பறிபோகிறது என்பது அவருக்கு தெரியாதா. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் தமிழ்நாட்டில் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள். அவர்களின்  வேலை தான் இது.  

கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க தவறியதால் தான் கோவை குண்டு  வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஒரு தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதன் மூலம் தமிழக அரசு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை ஊக்குவிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

பாஷா

தமிழ்நாடு எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. அந்த நபரின் இறுதி ஊர்வலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு அரசியல் தலைவர்கள் கலந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

அவர்களை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் அது தவறுதான். குழந்தைகளைக் கூட கொன்று குவித்த ஒருவர் தியாகி போல சித்தரிக்க முடியுமா. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை கொண்டாட முடியுமா. இது மிகவும் தவறு.

கோவை

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், முறையாக பணியாற்றும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அதேநேரத்தில் கொலையாளிகளை ஊர்வலமாக கொண்டு சென்று மரியாதையுடன் புதைக்க நினைக்கும்போது எதிர்ப்பதும் சாதாரண குடிமகனின் கடமை.” என்றார்.

'பழனிசாமியின் பயப்பட்டியல் ' ; `திமுக-வுக்கு பயம் வந்துவிட்டது' - முற்றும் அதிமுக, திமுக `பயம்’ வார்

'அ.தி.மு.கவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம்' சமீபத்தில் அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின... மேலும் பார்க்க

'விஜய் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது; உளவுத்துறைக்கு இதுதான் வேலையா?' - அண்ணாமலை கேள்வி!

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஒரு மனிதர் தன்னுடைய பொறுப்புக்கு தகுந்த வகையில் பேச வேண்டும். உதயநிதியின் நடவடிக்கையை மக்கள் பார்த்துக்... மேலும் பார்க்க

'நீங்க என்னை கிறிஸ்துவன் என நினைத்தால் கிறிஸ்துவன்.. முஸ்லிம் என நினைத்தால் முஸ்லிம்' - உதயநிதி

கோவை பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “ஒட்டுமொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நிகழ்ச்சி கிறிஸ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சந்திப்பு; `அரசியல் பேசவில்லை' - மாதுளை பழங்களை வழங்கிய சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் எப்போதும் விவசாயிகள் உரிமைக்காக மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளா... மேலும் பார்க்க