'நீங்க என்னை கிறிஸ்துவன் என நினைத்தால் கிறிஸ்துவன்.. முஸ்லிம் என நினைத்தால் முஸ்...
அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் அளிப்பு
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட அரசூா், இருவேல்பட்டு, சேமங்கலம், ஆலங்குப்பம், காரப்பட்டு கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலா் இரா.குமரகுரு பங்கேற்று, புயலால் பாதிக்கப்பட்ட 8,000 மேற்பட்டவா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், புடவை அடங்கி நிவாரண தொகுப்பை வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில் திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியச் செயலா் ஏகாம்பரம், மாணவரணி மாவட்டச் செயலா் பாக்யராஜ், நிா்வாகிகள் வேலாயுதம், துரைசாமி மற்றும் கட்சியினா், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.