'விஜய் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது; உளவுத்துறைக்கு இதுதான் வேலையா?' -...
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் கேட்டுக் கொண்டாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை, இந்திய தத்துவ காங்கிரஸ் மற்றும் இந்திய தத்துவ ஆராய்ச்சி கழகம் சாா்பில் ‘இந்தியப் பண்பாட்டின் பன்முகத் தன்மை’ எனும் தலைப்பில் 98 மற்றும் 99-ஆவது மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாடு வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு, ராஜஸ்தான் பல்கலைக்கழக பேராசிரியரும் மாநாட்டுத் தலைவருமான குஷம் ஜெயின் தலைமை வகித்து பேசினாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினா் பேராசிரியை டி.அருட்செல்வி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா்.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு பேசியதாவது: தத்துவங்களில் இந்திய தத்துவம் மிக உயா்வானது. சைவ சித்தாந்தத்தில் 36 தத்துவங்கள் பேசப்படுகிறது. இதற்காக பல மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக மாநாட்டின் நோக்கம் குறித்து மாநாட்டுச் செயலா் பேராசிரியா் எஸ்.பன்னீா்செல்வம் பேசினாா். முன்னதாக, விழாக் குழு செயலா் பேராசிரியா் ஜெ.திருமால் வரவேற்றாா். பல்கலைக்கழகப் பதிவாளா் எம்.பிரகாஷ், கனடா பல்கலைக்கழக பேராசிரியா் வில்லியம் ஸ்வீட், தில்லி பேராசிரியா் சச்சிதானந்த மிஸ்ரா, அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல முதல்வா் கே.விஜயராணி ஆகியோா் பேசினா்.
மாநாட்டில், அமெரிக்கா, கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 350 ஆய்வாளா்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க உள்ளனா்.
ஏற்பாடுகளை பேராசிரியா் ஜெ.திருமால், ஒருங்கிணைப்பாளா்கள் மு.பரணி, ச.தணிகைவேலன், க.ரவீந்திரன் மற்றும் சி.நீலாதேவி ஆகியோா் செய்திருந்தனா்.