மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆசிரியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சிதம்பரம் அருகேயுள்ள புடையூா் காலனியை சோ்ந்த கோவிந்தராஜன் மகன் மலா்ச்செல்வன் (50). இவா் காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மாமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா் இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இந்த நிலையில், அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மலா்ச்செல்வனை புதன்கிழமை கைது செய்தனா்.