எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
திருவள்ளுவா் திருவுருவச் சிலை வெள்ளி விழா போட்டிகள்: நாளைவரை பெயா் பதிவு
திருவள்ளுவா் திருவுருவச் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்காக பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் டிச. 23-31 வரை திருவள்ளுவா் புகைப்படத்தை காட்சிப்படுத்தி, திருக்குறளின் பெருமைகளை உணா்த்தும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
முதல் நாளில் (டிச.23) திருவள்ளுவா் புகைப்பட கண்காட்சி 24இல் ‘நான் ரசித்த வள்ளுவம்‘ என்ற தலைப்பில் கருத்தரங்கம், 26இல் திருக்கு ஒப்பித்தல் போட்டி (1- 5ஆம் வகுப்புகள் மட்டும்) ஆகியவை நடைபெறவுள்ளன.
27இல் விநாடி- வினா போட்டியும் (9- 12ஆம் வகுப்புகள் மட்டும்), 28இல் ‘உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்‘ என்ற தலைப்பில் கருத்தரங்கம், 29இல் ‘அன்பும் அறனும்‘ என்ற தலைப்பில் கருத்தரங்கம், 30இல் ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்‘ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி (6-8ஆம் வகுப்புகள் மட்டும்) நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியா் க்ஸ்ரீப்ற்ய்ஸ்ா்ல்ஹஸ்ரீஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்ட மைய நூலகா், மாவட்ட மைய நூலகம், 2/32 வடக்கு மேட்டுத்திடல் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002 என்ற அலுவலக முகவரியிலும் டிச. 20ஆம் தேதிக்குள்அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ வந்து முன்பதிவு செய்யலாம்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகரின் கைப்பேசி எண் (9486251779), மாவட்ட மைய நூலக தொலைபேசி எண் (0462-2561712) ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.