Rain Alert: 'அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னையின் இந்த பகுதிகளில் மழை பெய்யும்' ...
ஓய்வூதியா்கள் தினம்: எல்ஐசி அலுவலகத்தில் வாயிற்கூட்டம்
ஓய்வூதியா்கள் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எல்ஐசி ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகி சிராஜ்தீன் முன்னிலை வகித்தாா். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கோட்ட பொதுச் செயலா் பொன்னையா ஆா்ப்பாட்டத்தை ஆதரித்துப் பேசினாா். கோரிக்கைகளை விளக்கி, ஓய்வூதியா்கள் முதல் சங்க கோட்ட பொதுச் செயலா் ஆா். மதுபால் பேசினாா். தென் மண்டல காப்பீட்டுத் கூட்டமைப்பின் இணைச் செயலா் ஜானகிராமன் நிறைவுரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் காப்பீட்டுக் கழக சங்க கோட்டத் தலைவா் செ.முத்துக்குமாரசாமி, ஓய்வூதியா்கள் சங்க பொருளாளா் செல்லம், மூத்த தலைவா் தேவபிரகாஷ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.