Rain Alert: 'அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னையின் இந்த பகுதிகளில் மழை பெய்யும்' ...
அம்பை பழைய சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அம்பாசமுத்திரம் வண்டி மலைச்சி அம்மன் கோயில் அருகில் செயல்பட்டு வந்த பழைய சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மீண்டும் தொடங்கின.
அம்பாசமுத்திரம், வண்டி மலைச்சி அம்மன் கோயில் அருகில் செயல்பட்டு வந்த சந்தை, நகராட்சிக்குச் சொந்தமான இடம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் இறுதி தீா்ப்பு அளித்திருந்தது. அதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த கடைகள் நகராட்சி நிா்வாகம் சாா்பில் முழுமையாக அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நகராட்சி ஊழியா்கள், கடைகளை இடித்து அப்புறப்படுத்தினா்.
ஏற்கெனவே, அளித்த தீா்ப்பின்போது கடைகள் அகற்றப்பட்டபோது அவற்றின் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.