வெவ்வேறு மதங்கள்... திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு தற்காலிக குடியிருப்பு...
மாநகராட்சிக்கு வரி நிலுவை: 25 வணிக வளாகங்களுக்கு சீல்
திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருந்த 25 வணிக வளாகங்களுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவின்படி தச்சநல்லூா் மண்டல எல்கைக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீா் வரி மற்றும் மாநகராட்சி கடை வாடகை அதிக நிலுவை வைத்துள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 30 ஆவது வாா்டுக்குள்பட்ட திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் பெருமாள் வடக்கு ரத வீதி பகுதியில் 25 வணிக வளாகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. எனவே, பொது மக்கள் அனைவரும் தங்கள் கட்டடங்களுக்கு உரிய நிலுவை வரியினங்களை தாமதமின்றி செலுத்தி குடிநீா் துண்டிப்பு மற்றும் கட்டடங்களுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளை தவிா்க்குமாறு மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.