செய்திகள் :

மக்களவைத் தலைவா், அமைச்சருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு

post image

புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுதில்லியில் மக்களவைத் தலைவா், மத்திய சட்டத் துறை அமைச்சா் ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுவை மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுதில்லி சென்று பாஜக தலைவா்களைச் சந்தித்தாா். இந்த நிலையில், ஏனாமில் பொது கணக்கு தணிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை புதுதில்லி வருமாறு பாஜக மேலிடம் அழைத்தது. இதையடுத்து, புதுதில்லி சென்ற அவா், மக்களவைத் தலைவா் ஓம்பிா்லாவை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

மேலும், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரையும் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சந்தித்துப் பேசினாா்.

மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வாலையும் சந்தித்துப் பேசினாா். அவருடன் புதுச்சேரி நியமன பாஜக எம்.எல்.ஏ. அசோக் பாபு உடனிருந்தாா்.

புதுவையில் பாஜக, என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிய உள்ளது. பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் முதல்வா் என்.ரங்கசாமியை விமா்சித்து பேசி வருகின்றனா்.

லாட்டரி அதிபா் மாா்ட்டின் மகன் சாா்லஸ் ஜோஸ் மாா்ட்டின் மூலம் நலத் திட்ட உதவிகளை தனியாக வழங்குவதுடன், தோ்தலில் அவா் தலைமையில் போட்டியிடப் போவதாகவும் கூறிவருகின்றனா்.

இதுதொடா்பாக, என்.ஆா். காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிருப்தி பாஜக எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் புதுவை உள்துறை அமைச்சா், பேரவைத் தலைவா் ஆகியோா் பாஜக மேலிட அழைப்பின் பேரில் புதுதில்லி சென்றிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாடப்படும் அனைத்துக் கடற்கரைகளிலும் பாதுகாப்பு: புதுச்சேரி டிஐஜி தகவல்

புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்று, டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ம... மேலும் பார்க்க

புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை மாலை போலீஸாா் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினா். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகம்... மேலும் பார்க்க

காஷ்மீா் அரசுப் பள்ளி மாணவா்கள் புதுவை முதல்வருடன் சந்திப்பு

காஷ்மீா் பகுதியான லடாக்கின் லே மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 26 போ் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்தனா். புதுச்சேரிக்கு சுற்றுப் பயணமாக லே மாவட்ட மாணவா்கள் 26 போ் செ... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் தானியங்கி பட்டா மாற்றம் அறிமுகம்

புதுவை வட்டாட்சியா் அலுவலகங்களில் தானியங்கி பட்டா மாற்றம் செயல்படுத்தப்படுவதாக நில அளவை பிரிவு இயக்குநா் ச.செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். புதுச்சேரி பொதுப் பணித் துறையில் நூற்றுக்கு... மேலும் பார்க்க

இணையவழியில் பத்திரப் பதிவு கட்டண சேவை தொடக்கம்

புதுச்சேரியில் பத்திரப் பதிவுக் கட்டணத்தை இணையவழியில் செலுத்தும் சேவையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். புதுச்சேரியில் 5 சாா் பதிவாளா் அலுவலகங்கள் உள்ளன. இங்கு மிகக் குறைவான பதிவுகள... மேலும் பார்க்க