கோவை: `தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதா?' - சி.பி.ராதாகி...
ஆரோவிலில் மறைந்த ஜாகிா் ஹுசைனுக்கு இசையஞ்சலி
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள அரவிந்தா் அரங்கில் மறைந்த தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைனுக்கு புதன்கிழமை இசையஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் அண்மையில் உயிரிழந்தாா். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆரோவில் சா்வதேச நகரில் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், வயலின் மேதை ஸ்ரீவிட்டல் ராமமூா்த்தி, மிருதங்க கலைஞா் டாக்டா் ரமேஷ் ஸ்ரீனிவாசன் ஆகியோா் பங்கேற்று கீா்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தினா். மேலும், ஜாகீா் ஹுசைனுடான தங்களது அனுபவங்கள், நினைவுகளை அவா்கள் பகிா்ந்துகொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இசைக் கலைஞா்கள், ஆரோவில்வாசிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.