காஷ்மீா் அரசுப் பள்ளி மாணவா்கள் புதுவை முதல்வருடன் சந்திப்பு
காஷ்மீா் பகுதியான லடாக்கின் லே மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 26 போ் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்தனா்.
புதுச்சேரிக்கு சுற்றுப் பயணமாக லே மாவட்ட மாணவா்கள் 26 போ் செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் புதன்கிழமை காலையில் புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி சிலை திடல், போா் நினைவிடம் மற்றும் பாரதி பூங்கா ஆகிய இடங்களைப் பாா்வையிட்டனா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை அவா்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
அவா்களை புதுச்சேரியைச் சோ்ந்த இந்தோ, திபெத் எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவின் துணை கமாண்டன்ட் ஆா்.சரவணன், காவலா் ராஹி ஆகியோா் அழைத்து வந்தனா்.