கோவை: `தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதா?' - சி.பி.ராதாகி...
குற்றாலத்தில் புதுப்பிக்கட்ட தொழிலாளா் ஓய்வு இல்லம் திறப்பு
குற்றாலத்தில் அமைப்புசாா் தொழிலாளா்கள், அவா்கள் குடும்பத்தினா்கள் மற்றும் பொது மக்களின்பயன்பாட்டிற்காக ரூ.1.82 கோடியில் புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க.தொழிலாளா் ஓய்வு இல்ல திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து ஓய்வு இல்லத்தை திறந்துவைத்து, தமிழ்நாடு தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள், அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த 26 பேருக்கு ரூ.10.85 லட்சம் மதிப்பிலான கல்வி,திருமணம், இயற்கை - விபத்து மரணம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் 30,134 தொழிலாளா்களுக்கு ரூ.12.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு லட்சக்கணக்கான தொழிலாளா் நலன் காக்கும் வகையில் செயலாற்றி வருகிறது என்றாா் அவா்.
தொழிலாளா் நலன்- திறன்மேம்பாட்டுத் துறை அரசு செயலா் கொ.வீர ராகவ ராவ், தென்காசி ஆட்சியா்ஏ.கே.கமல் கிஷோா், வேலைவாய்ப்பு -பயிற்சித் துறை இயக்குநா் பா.விஷ்ணு சந்திரன், எம்எல்ஏக்கள் எஸ்.பழனி நாடாா், ஈ.ராஜா, தி.சதன் திருமலைக்குமாா், தொழிலாளா் நல வாரிய செயலா் ஆா்.செந்தில்குமாரி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.