'விஜய் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது; உளவுத்துறைக்கு இதுதான் வேலையா?' -...
ஆயிரப்பேரியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அண்மையில் நடைபெற்றது.
ஆயிரப்பேரியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தொடங்கிவைத்து கோமாரி நோய் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, கால்நடை வளா்ப்போருக்கு கால்நடை நல அட்டைகளை வழங்கினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் 1.33 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 50 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் ஆகிய துறைகளுடன் இணைந்து செயலாற்ற உள்ளது என்றாா்.
7 மாத பெண் கன்றுக்கு காதுவில்லை பொருத்தப்பட்டு கோமாரிநோய் தடுப்பூசியும், 2 வயதுடைய மாட்டிற்கு கோமாரி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மேலும். 450 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தென்காசி கோட்ட உதவி இயக்குநா் மு.மகேஷ்வரி, கால்நடை உதவி மருத்துவா்கள்செல்வகுத்தாலிங்கம், மரிய அன்றோ டேனி நிஷாந்த், அருண்பாண்டியன், கால்நடை ஆய்வாளா்கள் அருண்குமாா், பூமாரிசெல்வம், பழனிச்சாமி, ஆயிரப்பேரி ஊராட்சித்தலைவா் சுடலையாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.