Ashwin: 'தோனி மாதிரி... அஷ்வின் இப்படி பண்ணிருக்கக் கூடாது...' - சுனில் கவாஸ்கர்...
சிவகிரி அருகே பைக் மோதி பள்ளி மாணவா் காயம்
சிவகிரி அருகே பைக் மோதியதில் பள்ளி மாணவா் காயமடைந்தாா்.
சிவகிரி கக்கன் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கம் மகன் நாகராஜ் (12). அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துவருகிறாா். இவா், உடல் நலம் சரியில்லாததால் சிவகிரி அரசு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக தென்காசி-மதுரை சாலையோரம் நின்றிருந்தாா்.
அப்போது, சிவகிரி கீழமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து (42) என்பவா் ஓட்டிவந்த பைக் நாகராஜ் மீது மோதியதாம். இதில், காயமடைந்த நாகராஜ் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.