செய்திகள் :

நீங்களும் டைனோசருக்கு ஓனராகலாம்! விலை இவ்வளவுதான் - ஆனால் லாபம்?

post image
பங்குச் சந்தையைப் போல டைனோசருக்கும் தனி சந்தை ரெடியாகிவிட்டது. பங்குச் சந்தைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. நிறுவனங்களின் பங்குகளுக்கு இருக்கும் சப்ளை, டிமாண்டுக்கு ஏற்ப பங்கு விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். பங்குச் சந்தைகள், கடன் சந்தைகளைத் தாண்டி கிரிப்டோகரன்சி சந்தையும் சமீப ஆண்டுகளில் பிரபலமடைந்து வருகின்றன. இதையும் தாண்டி சில மாற்றுச் சொத்துகள் (Alternative Assets) முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

ஓவியம், சிற்பம் போன்ற கலைப் பொருள்கள், மிக அரிய புத்தகங்கள், ஒயின், விஸ்கி போன்ற மது பானங்கள், மிகப் பழைமையான கார்கள், முத்திரைத் தாள், காயின்கள் போன்றவை மாற்றுச் சொத்துகளாக வளர்ந்திருக்கின்றன. இதுபோன்ற அரிய பொருள்களின் விலை மிக அதிகம் என்பதால், பங்குகளாகப் பிரித்து முதலீட்டாளர்களிடம் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஓவியங்களுக்குத் தனி மார்க்கெட் இருக்கிறது. அதேபோல, பழைய ஒயின்கள் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. இதுபோன்ற பழைய ஒயின்கள், கலைப் பொருள்களை வாங்கி முதலீடு செய்பவர்களும் உண்டு.

Watches Collection

மேலும், ரோலக்ஸ் வாட்ச்சுக்கு தனி சந்தை இருக்கிறது. ஆன்லைனிலேயே ரோலக்ஸ் வாட்ச் விலை ஏற்ற இறக்கங்களைப் பார்க்க முடியும். மற்ற சுவிஸ் வாட்ச் போன்ற ஆடம்பர வாட்ச்சுகளுக்கு பல கோடிகள் புழங்கும் சந்தை இருக்கிறது. பழைய கார்கள், விஸ்கி, மியூசிக் ராயல்டி, விளையாட்டு உபகரணங்கள், பேஸ்பால் கார்டுகள் போன்றவற்றிலும் முதலீடு செய்பவர்கள் இருக்கின்றனர். மிகப் பழைய காயின்கள், அரிய காயின்களுக்குப் பெரிய சந்தை இருக்கிறது.

17-ம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டில் மலர் சந்தையில் டுலிப் மலர்கள் மிக அதிக விலைக்கு வணிகம் செய்யப்பட்டன. ஸ்பெயின் நாட்டில் ஒயின்கள், இத்தாலியில் கலைப் பொருள்கள் போன்றவை சந்தை வைத்து வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. புத்தக விரும்பிகள் மிக அரிதான புத்தகங்களை அதிக விலை கொடுத்து வாங்கி சேகரிக்கின்றனர். இதெல்லாம் ஓகேதான்... இப்போது டைனோசரையே பங்குகளாகப் பிரித்து முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆம், இந்த வரிசையில் இப்போது டைனோசர்களும் சேர்ந்துவிட்டன.

சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமியில் விழுந்த ராட்சத விண்கல் ஏற்படுத்திய தாக்கத்தால், டைனோசர்கள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போதைய காலகட்டத்தில் டைனோசர்களின் எலும்புகள் போன்ற தொல்பொருள் எச்சங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அவற்றில் சில டைனோசர் எச்சங்கள் ஏலத்தில் அசர வைக்கும் விலைக்கு விற்பனையாகி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், டைனோசர் எச்சங்களை 44.6 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பணக்காரரான கென்னித் கிரிஃபின். இப்படி டைனோசர் எச்சங்கள் பல மில்லியன் டாலர் புழங்கும் சந்தையாகிவிட்டன.

டைனோசர்

இந்த வாய்ப்பை ஏன் விட்டுவைக்க வேண்டும் என, டைனோசர் எச்சங்களைப் பங்கு போட்டு விற்க ரெடியாகிவிட்டது ரேலி (Rally) நிறுவனம். இந்த நிறுவனம் பல வகையான அரிய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் வியோமிங் பகுதியில் தோண்டப்பட்டு வரும் டைனோசரின் எச்சங்களை டிசம்பர் 20-ம் தேதி பங்குகளாக விற்கப்போவதாக ரேலி நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தம் 2 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. ஒரு பங்கின் விலை 68.75 டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5,830 ரூபாய். இந்த விற்பனை மூலம் சுமார் 13.75 மில்லியன் டாலர் முதலீடுகளை ரேலி நிறுவனம் திரட்டப்போகிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் இந்த டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதற்கட்டமாக 2.25 மில்லியன் டாலரைச் செலுத்தி உரிமைகளை முன்பதிவு செய்துவிட்டது ரேலி நிறுவனம். இதுவரை டைனோசரின் சுமார் 67 சதவிகித எலும்புகள் தோண்டப்பட்டுவிட்டன. அதற்கு முன்பாகவே பங்குகளாகப் பிரித்து வியாபாரம் செய்துவிட முடிவு செய்துவிட்டது ரேலி நிறுவனம்.

இதுகுறித்து அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், டைனோசரின் நீளம் 23 அடி, உயரம் 7 அடி என்று கூறப்பட்டுள்ளது. டைனோசர் பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்கள் அதற்குப் பிறகு விற்க வேண்டும் எனில், ரேலி நிறுவனத்தின் இணையதளம் அல்லது மொபைல் ஆப் வழியாக மட்டுமே விற்கவோ, வாங்கவோ முடியும். சுமார் 18 முதல் 24 மாதங்களில் ஒட்டுமொத்த டைனோசரும் ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். அப்போது, பங்குதாரர்கள் அனைவருக்கும் லாபம் கிடைக்கும் என்பதுதான் ஐடியா.

டைனோசர் எச்சங்கள்

நிறுவனங்களுக்கு ஐ.பி.ஓ வெளியிடுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது டைனோசருக்கே ஐ.பி.ஓ வந்துவிட்டது. ஆனால், ஆய்வாளர்களுக்கோ இது ஹேப்பியான விஷயம் இல்லை. பெரும் தனியார் முதலீட்டாளர்கள் நிறைய விலை கொடுத்து டைனோசர் எச்சங்களை வாங்கிவிடுகின்றனர். இதனால், டைனோசர் எச்சங்கள் ஆராய்ச்சிக்குக் கிடைப்பதில்லை. டைனோசர் எச்சங்கள் பொது உடைமையாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.

வரலாற்றில் மலர்களைக் கூட அநியாய விலைக்கு யூக அடிப்படையில் வர்த்தகம் செய்திருக்கின்றனர். ஒயின், வாட்ச் போன்ற பொருள்களின் விலை உயரும் என்ற யூகத்தில் வாங்கி சேகரிக்கின்றனர். அதன் நீட்சியாக இப்போது டைனோசர் எலும்புகளைப் பங்கு போட்டு விற்கின்றனர். இதுவும் ஒரு யூக அடிப்படையிலான சந்தையாகத்தான் வளரும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

சரியும் அம்பானி, அதானி சொத்து மதிப்பு; அடுத்தடுத்து உள்ள 'செக்' - காரணம் என்ன?

இந்தியாவின் பிசினஸ் உலகில் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கும் இரண்டு 'A'-க்களான அம்பானி மற்றும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.ஆசிய அளவில... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 2: `சிறுதானியத்தில் சக்ஸஸ் ஃபார்முலா' - ஆரைக்கல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

ஆரைக்கல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்'StartUp' சாகசம் 2இந்திய அரசு FPO(விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு)-களின் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதனை மேம்படுத்தவும் தீவிரமாக ஊக்குவித்துவருகிறது.விவசாய உ... மேலும் பார்க்க

Elon Musk: எகிறிய மஸ்க்கின் சொத்து மதிப்பு; எவ்வளவு தெரியுமா? - இவருக்கு அடுத்த இடங்களில் யார் யார்?

எலான் மஸ்க் அடுத்த சாதனைக்குள் கால் அடி எடுத்து வைத்திருக்கிறார். சாதனை என்றால் உலகத்தில் இதுவரை யாரும் தொட்டிராத இடத்தை அடைந்துள்ளார். என்ன பில்டப் எல்லாம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறதா... எப்... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 1: `PMEGP' கடனை பயன்படுத்தி வந்த வாய்ப்பு... காகித மறுசுழற்சியில் `பேப்பர் எக்ஸ்’

தமிழகத் தொழில் முனைவோர் தொடர்"நூறு நம்பிக்கை நாயகர்கள்"தொடரின் நோக்கம்:1. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து புதுமையான தயாரிப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களை அடையாளம் காணுதல்2. அவர்களின் பொரு... மேலும் பார்க்க