நாடாளுமன்ற வளாகத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்!
நாடாளுமன்றத்தில் ராகுல் தலைமையில் போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியது என்ன?
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, சஞ்சய் ரெளத், திருமாவளவன் உள்ளிட்ட எம்பிக்கள் நீல நிற ஆடை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக செல்லவுள்ளனர்.