செய்திகள் :

இந்தியன் - 3 திரையரங்குகளில் வெளியாகும்: ஷங்கர்

post image

இந்தியன் - 3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதுடன் கடுமையான இணைய கிண்டல்களை எதிர்கொண்டது. ஆனாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க: ஆடுகளத்தைவிட கடினமான படம் விடுதலை: வெற்றி மாறன்

இதனால், இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 3ல் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில் சிலவற்றை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தும் முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

மேலும், இந்தியன் - 3 படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர், ”இந்தியன் - 2 படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் அதிர்ச்சியளித்தன. அதைக் கருத்தில்கொண்டு இந்தியன் - 3 படத்தை சரிசெய்வேன். மூன்றாவது பாகம் திரையரங்குகளில்தான் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் அறிவுரைப்படி விளையாடும் ரஞ்சித்! ரசிகர்கள் கிண்டல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் மற்றவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார். முதல்முறையாக மற்றவரிடம் ரஞ்சித் இவ்வாறு பேசுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்... மேலும் பார்க்க

திரையரங்குகளில் 50-வது நாள்! அசத்தும் அமரன், லக்கி பாஸ்கர்!

அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டில் 50-வது நாளை நிறைவு செய்துள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படமும் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைபடம... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: போட்டியைவிட்டு வெளியேறிய அன்ஷிதா!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை அன்ஷிதா வெளியேறுவதைப் போன்ற முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றுவரும் வீடு கட்டும் போட்டியில் போட்டியாளர்களிடையே ஏற்பட்ட மோதலால், மன உளைச்... மேலும் பார்க்க

கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்! இங்கிலாந்து மன்னர் வழங்கினார்!

திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ் இருவரும் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனையில் கௌரவிக்கப்பட்டனர். ஆஸ்கர் விருது வென்றவரும், ஹாலிவுட்டில் புகழ... மேலும் பார்க்க

‘அதற்காக பாலா என்னிடம் அழுதார்..’: மிஷ்கின்

இயக்குநர் பாலாவுடனான நட்பு குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்... மேலும் பார்க்க

சண்டைப் பயிற்சியாளர் கோதண்டராமன் காலமானார்!

நடிகரும் சண்டைப் பயிற்சியாளருமான கோதண்டராமன் காலமானார். தென்னிந்தியளவில் சினிமா சண்டைப் பயிற்சியாளராக அறியப்பட்டவர் கோதண்டராமன் (65). பகவதி, கிரீடம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் துணை சண்டைப் பயிற்சியாள... மேலும் பார்க்க