செய்திகள் :

பள்ளி நிகழ்ச்சியில் 30 பேர் பலி!

post image

நைஜீரியா நாட்டில் பள்ளி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் இயங்கி வந்த பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு நிறைவையும் கொண்டாடும் விதமாக, புதன்கிழமை (டிச. 18) கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகளைக் காணவும், பரிசுப் பொருள்களை வாங்கவும் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடினர். இந்த நிலையில், கூட்டத்தினரிடையே எதிர்பாராத விதமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 30 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதையும் படிக்க:சிடோ புயல்: ஆப்பிரிக்காவில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிடோ புயல்: ஆப்பிரிக்காவில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்பிரிக்காவில் சிடோ புயலால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம வலுப்பெற்று புயலாக மாறியது. சிடோ எனப் பெயரிடப்பட்ட இந... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழித் தாக்குதல்: 16 பாலஸ்தீனியர்கள் பலி!

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது. ஜபாலியா நகரில் புதன்கிழமை இரவு அல்-நஜ்ஜார் என்பவர் வீட்டின் மீது இஸ்ரேலிய விம... மேலும் பார்க்க

ரஷிய தளபதி படுகொலை: உஸ்பெகிஸ்தான் இளைஞா் கைது

ஸ்கூட்டா் குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கியத் தளபதி இகாா் கிறிலோவ் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.இதுகுறித்து ... மேலும் பார்க்க

ஜப்பான்: ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி

ஜப்பானின் தனியாா் புத்தாக்க நிறுவனமான ஸ்பேஸ் ஒன், தனது ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை இரண்டாவது முறையாக விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அந்த நிறுவனம் உருவாக்கியுள... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை

சில அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக வரி விதிக்கும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவும் அதிக வரி விதிக்க நேரிடும் என்று அந்நாட்டின் புதிய அதிபராக தோ்வு செ... மேலும் பார்க்க

பாகிஸ்தைன் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரா்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கைபா் பக்துன்கவா மாகாண... மேலும் பார்க்க