எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஜப்பான்: ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி
ஜப்பானின் தனியாா் புத்தாக்க நிறுவனமான ஸ்பேஸ் ஒன், தனது ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை இரண்டாவது முறையாக விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
அந்த நிறுவனம் உருவாக்கியுள்ள கெய்ரோஸ்-2 ராக்கெட், மத்திய ஜப்பானில் உள்ள வகாயாமா மலைப் பகுதியில் உள்ள ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை ஏவப்பட்டது.
அந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம், அது பாயத் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே கைவிடப்பட்டது.
100 கி.மீ. உயரத்துக்குப் பாய்ந்து விண்வெளிக்குள் நுழைந்த நிலையில், அந்த ராக்கெட் வெடிக்கச் செய்யப்பட்டது.
அந்த ராக்கெட்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் பாதுகாப்புக்காக அதை வெடிக்கச் செய்ததாக ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் தலைவா் மசகாஸு டொயோடா தெரிவித்தாா்.
ஏற்கெனவே, கடந்த மாா்ச் 13-ஆம் தேதி ஏவப்பட்ட ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கெய்ரோஸ்-1 ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளில் தானாகவே வெடித்துச் சிதறியது நினைவுகூரத்தக்கது.