டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!
ரூபாய் மதிப்பு கடும் சரிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு இன்று (டிச. 19) கடுமையாகச் சரிந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் 85 ரூபாய்க்கு மேலே சென்றுள்ளது.
நேற்றைய வணிக நேர முடிவில் 84.94 காசுகளாக இருந்த நிலையில், இன்று 14 காசுகள் சரிந்து 85.08 காசுகளாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தைகளின் நேர்மறையான போக்கு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதிவரத்து குறைவு உள்ளிட்ட காரணிகள் ரூபாய் மதிப்பில் எதிரொலித்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் ரூ. 85.06 காசுகளுடன் வணிகமானது.
பின்னர் தொடர்ந்து சரிந்து வணிக நேர முடிவில் ரூ. 85.08 காசுகளுடன் நிர்ணயமானது. இதன்மூலம் இன்று மட்டும் ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிவைச் சந்தித்துள்ளது.
ரூபாய் மதிப்பு 84 ரூபாயிலிருந்து 85 ரூபாய்க்கு மிகக் குறுகிய காலத்தில் சரிந்துள்ளது. இதற்கு முன்பு ரூ. 83-லிருந்து ரூ. 84-க்கு வர 14 மாதங்கள் ஆனது. ரூ. 82-லிருந்து ரூ. 83க்கு வர 10 மாதங்கள் ஆனது.
இந்திய ரூபாய் மதிப்பைப் போன்று, கொரியாவின் வோன், மலேசியாவின் ரிங்கிட், இந்தோனேஷியாவின் ருபியா ஆகியவை 0.8%-1.2% வரை சரிந்தன.
இதையும் படிக்க | 4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! ஐடி, வங்கித் துறை கடும் வீழ்ச்சி!