மேல்மருவத்தூர் பயணிகளுக்கு நற்செய்தி அளித்த ரயில்வே!
பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் மேல்மருவத்தூரிலும் தற்காலிகமாக வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் (12636) நாள்தோறும் 7.20 மணிநேரப் பயணமாக, காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். தொடர்ந்து, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு (12635) பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடையும். தென்மாவட்ட பயணிகளுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தைப்பூசம், இருமுடி விழாவை முன்னிட்டு பயணிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, மேல்மருவத்தூரிலும் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12636), டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் மதியம் 12.23 - 12.25 மணி வரை 2 நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Temporary Stoppage of Vaigai Express at Melmaruvathur
— Southern Railway (@GMSRailway) December 19, 2024
Vaigai Express will have a two-minute stoppage at Melmaruvathur Station for the Irumudi/Thaipoosam Festival.#FestivalSpecial#VaigaiExpress#southernrailwaypic.twitter.com/rvBAI1UjOO