செய்திகள் :

டிச.25 வரை மிதமான மழை: அதிகாலையில் பனிமூட்டம்!

post image

தமிழகத்தில் டிசம்பர் 25 வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை..

நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (19-12-2024) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.

19-12-2024: வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

20-12-2024 முதல் 25-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

19-12-2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20-12-2024: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள்

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளியை சந்தித்த முதல்வா் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டத... மேலும் பார்க்க

ஜன.4 முதல் ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை

ஹூப்ளி- ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில் சேவை ஜனவரி 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வரும் 2025ஆம் ஆண்டு ஜன. ... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் சில மணிநேரங்கள் மழை பெய்யும்!

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பகல் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு கனமழைக்கான எச்சரிக்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!

2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூா்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றாா். அவா் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியாவாா். சென்னையில் பிறந்த க... மேலும் பார்க்க

எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை! பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?

தீயணைப்புத் துறை உரிமம் வழங்கலை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, 25 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்துறையின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது பாதுகாப்பில் சமரசம் செய்யப்படாமல் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறாா் முதல்வா்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் வியாழக்கிழமை (டிச. 19) வழங்க உள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க