தலா ரூ. 50,000 செலுத்தினால் விடுதலை! 14 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தீ...
ஜன.4 முதல் ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை
ஹூப்ளி- ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில் சேவை ஜனவரி 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வரும் 2025ஆம் ஆண்டு ஜன. 4-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹூப்ளி - ராமேசுவரம் ரயில் ஜனவரி 4ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு ஹூப்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும் வகையிலும், ராமேசுவரம் - ஹூப்ளி ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்றடையும் வகையிலும் இயக்கப்படவிருக்கிறது.
ஹூப்ளி, கர்நாடக மாநிலத்தின் மிகச் சிறந்த சுற்றுலா நகரமாக உள்ளது. அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு 22 மணி நேரம் பயணித்து இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சுமார் 21 பிரபலமான ரயில் நிலையங்களில் நின்று செல்வது மிகவும் சிறப்பு. திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக இந்த ரயில் பயணிக்கும்.