தலா ரூ. 50,000 செலுத்தினால் விடுதலை! 14 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தீ...
வெள்ளி திரை நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய தொடர்!
சின்ன திரையில் பொதுவாக தொடர்கள் அரை மணி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், ஒரு மணி நேரம் ஒளிபரப்பும் புது முயற்சியில் கெட்டி மேளம் தொடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக வாரத்தொடர்கள் 1 மணி நேரம் ஒளிபரப்புவது வழக்கமாக இருந்தாலும், மெகா தொடர்கள் அரை மணி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும்.
ஒவ்வொரு சேனலும் தங்களது சேனல்களில் ஒளிபரப்பும் தொடர்களை டிஆர்பியில் முன்னணியில் கொண்டு வருவதற்காக, டிஆர்பியில் பின்தங்கியுள்ள தொடர்களை முடித்தும், புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தியும் வருகின்றனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ் 8: போட்டியைவிட்டு வெளியேறிய அன்ஷிதா!
இருந்தாலும், மற்ற தொடர்களைவிட அதிக டிஆர்பி புள்ளிகளை பெரும் நோக்கில், புது முயற்சியாக ஜீ தமிழில் தொடங்கவுள்ள கெட்டி கேளம் தொடரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பவுள்ளனர்.
கெட்டி மேளம் தொடரில் பொன்வண்ணன், சாயாசிங், பிரவீனா, சிபு சூர்யன், செளந்தர்யா ரெட்டி, விராத் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இத்தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி சின்ன திரை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா, கார்த்திகை தீபம், சந்தியா ராகம் உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.