செய்திகள் :

நாடாளுமன்றம் வரை சென்ற காங்கிரஸின் வன்முறை: கங்கனா

post image

காங்கிரஸின் வன்முறை செயல்கள் இன்று நாடாளுமன்றம் வரை சென்றுள்ளதாக பாஜக எம்பி கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், காங்கிரஸுக்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தினர்.

இதில், ராகுல் காந்தி தள்ளியதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: நியூயார்க்கில் சீனாவின் ரகசிய காவல் நிலையம்!

இதனிடையே, பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் பாஜக எம்பிக்கள் காயமுற்ற சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய பாஜக எம்பி கங்கனா ரணாவத், “பாஜக எம்பி ஒருவருக்கு தையல் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அம்பேத்கர் அல்லது அரசியல் சாதனம் குறித்து காங்கிரஸ் பரப்பும் பொய் பிரச்சாரங்கள் முறியடைக்கப்படுகின்றன. அவர்களின் வன்முறை செயல்கள் இன்று நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது” என்று கூறினார்.

ஓடிடியில் புஷ்பா - 2 எப்போது?

புஷ்பா - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா - 2 . இப்படம் டிச. 5-ல் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர... மேலும் பார்க்க

நிறங்கள் மூன்று ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்கார்த்திக் நரேன்,அதர்வா முரளியுடன் இணை... மேலும் பார்க்க

வெள்ளி திரை நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய தொடர்!

சின்ன திரையில் பொதுவாக தொடர்கள் அரை மணி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், ஒரு மணி நேரம் ஒளிபரப்பும் புது முயற்சியில் கெட்டி மேளம் தொடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.பொதுவாக வாரத்தொடர்கள் 1 மண... மேலும் பார்க்க

ஆப்கனில் 2 பேருந்து விபத்துகளில் 52 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு பேருந்து விபத்துகளில் மொத்தம் 52 பேர் பலியாகியாகியுள்ளனர். மத்திய ஆப்கானிஸ்தானின் கசினி மாகாணத்தில் தலைநகர் காபுலிலிருந்து கந்தார் நகர... மேலும் பார்க்க

நியூயார்க்கில் சீனாவின் ரகசிய காவல் நிலையம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சீனாவின் ரகசிய காவல் நிலையத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்கர், தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சீன வம்சாவளியைச் சேர்ந்த சென் ஜின்பிங் (வயது-60) மற்... மேலும் பார்க்க

எங்கே பழனிசாமி? அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா?: அமைச்சர் ரகுபதி

யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கேள... மேலும் பார்க்க