Amit Shah: BJP-க்கு Backfire ஆன Ambedkar விவகாரம்; Rahul-க்கு குறிவைக்ககும் MPs?...
வீர தீர சூரனில் அந்தக் காட்சியை எடுத்து முடித்ததும் கண்ணீர் விட்டேன்: சுராஜ் வெஞ்ரமூடு
நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு வீர தீர சூரன் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி குறித்து பேசியுள்ளார்.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன் - பாகம் 2.
இரு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்தது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: திரையரங்குகளில் 50-வது நாள்! அசத்தும் அமரன், லக்கி பாஸ்கர்!
இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சுராஜ் வெஞ்சரமூடு, “வீர தீர சூரனில் உள்ள 16 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியில் எனக்கு பெரிய அனுபவம் கிடைத்தது. அக்காட்சியில், சண்டை, வசனம், நடிப்பு, ஒரு விபத்து என எல்லாம் இடம்பெற்றிருக்கும். ஒத்திகை பார்த்து அக்காட்சி எடுக்கப்பட்டது. ஒருமுறை சரியாக எடுத்துவிட்டோம்.
ஆனால், சின்ன குறை இருந்தது. உடனே, இயக்குநர் அழுதபடி இன்னொரு முறை எடுக்கலாம் என எங்களிடம் கேட்டுக்கொண்டார். மீண்டும், அதே சிங்கிள் ஷாட்டில் நடித்தோம். சரியாக எடுத்து முடித்ததும் எனக்கும் கண் கலங்கிவிட்டது. அப்படியொரு காட்சி அது. இயக்குநர் உள்பட அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டாடினோம். வீர தீர சூரன் கம்பீரமான சினிமாவாக இருக்கும்.” என்றார்.