பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!
IPL: “ஐபிஎல் போட்டிகளின்போது புகையிலை, மதுபான விளம்பரங்கள் செய்யக்கூடாது”- மத்திய அமைச்சகம் உத்தரவு
ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஐபிஎல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தலைவர் அருண் துமலுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சேவை பிரிவு இயக்குநர் அதுல் கோயல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், "கிரிக்கெட் வீரர்கள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள்.

அதனால் அவர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மது மற்றும் புகையிலை சார்ந்த விளம்பரங்களில் ஈடுப்படுத்தக்கூடாது. தொலைக்காட்சி ஒளிப்பரப்பில் போட்டிகளுக்கு இடையேயான விளம்பரம், மைதான விளம்பரம், ஐபிஎல் தொடர்பான பிற நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் எதிலும் மது, புகையிலை தொடர்பான விளம்பரங்கள் இருக்கக்கூடாது.
அதேபோல வர்ணனையாளர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசக்கூடாது. ஏற்கெனவே புகையிலையால் இதயம், நுரையீரல், கல்லீரல் என பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மக்களின் நலனைக் காப்பதில் கிரிக்கெட் வீரர்களுக்கும் தார்மீகக் கடமை இருப்பதால் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs