பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!
Rohit: ``மைதானத்தில் பேசுவது வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்த அல்ல..'' - ரோஹித் ஓப்பன் டாக்
சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது.

இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா சாம்பியன் டிராபியில் வென்ற பிறகு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், "எங்களிடம் உறுதியான அணி இருக்கிறது. அர்ப்பணிப்புள்ள அவர்களுடன் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் என்ன என்பது தெரியும். மைதானத்தில் இருக்கும்போது உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.
அங்கு வைத்து பேசும் வார்த்தைகள் வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்த அல்ல. எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதற்காகத்தான். வெற்றி அடைய நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். நாங்கள் ஐந்து டாஸ்களிலும் தோற்றாலும் ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவவில்லை. ஒரு தோல்வி கூட இல்லாமல் ஒரு தொடரை வெல்வது என்பது ஒரு பெரிய சாதனை, அது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது.

உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் கோப்பையை வெல்லும் வரை நாங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியிலும் தோற்காமல் கோப்பையை வென்ற தருணம் எங்களுக்கு சிறப்பானதாக இருந்தது. அந்த வெற்றியை வார்த்தைகளில் சொல்வது கடினம்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs