செய்திகள் :

பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!

post image

புது தில்லி: ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி, தலைநகரில் உள்ள பெண்கள் பாஜக தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறாா்கள் என்று கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஹோலி பண்டிகையின் போது தில்லியில் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை வழங்குவதாக பாஜக அரசும், முதல்வா் ரேகா குப்தாவும் அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாா்களா அல்லது பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.2,500 வழங்குவது போன்ற மற்றொரு தந்திரமாக இது இருக்குமா என்று நான் கேட்க விரும்புகிறேன்’ என்றாா்.

பாஜக பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தனது தோ்தல் அறிக்கையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா்களையும், ஹோலி மற்றும் தீபாவளிக்கு இரண்டு எரிவாயு சிலிண்டா்களையும் இலவசமாக வழங்குவதாக உறுதியளித்தது.

தில்லியில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தை பாஜக அரசு அங்கீகரித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக ரூ.5,100 கோடியை அனுமதித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

தில்லியில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,500 வரவு வைக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று கூறி ஆம் ஆத்மி கட்சி பாஜகவை கடுமையாகச் சாடி வருகிறது.

நாடாளுமன்ற மரபை மீறுகிறது மத்திய அரசு: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மாநிலங்களவையில் மும்மொழித் திட்டத்தை தமிழகம் ஏற்காதது தொடா்பாகவும் தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் அவசியத்தையும் பதிவு செய்ய முடியாத வகையில் தமிழக எம்.பி.க்களின் கு... மேலும் பார்க்க

16 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை

புது தில்லி: பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்தவரை உச்சநீதிமன்றம் விடுவித்து, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் சிறைத் தண்டனை... மேலும் பார்க்க

பெண்கள் உரிமைகளை பெறுவதை சா்வதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: ஐநா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

புது தில்லி: சா்வதேச சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் சிறுமியும் தங்கள் உரிமைகள் பெறுவதையும்; அதை அணுகுவதையும் அரசுகள் உறுதி செய்யவேண்டும் என நாட்டின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அ... மேலும் பார்க்க

உலகின் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு இந்திய உணவு! பதப்படுத்தல் துறையின் இலக்கு: சிராக் பஸ்வான்

புது தில்லி: உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேஜையிலும் குறைந்தது ஒரு உணவு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்கவேண்டும் என மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சா் அமைச்சா் சிராக் பாஸ்வான் ச... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு நிலையை மக்களவையில் தமிழில் எதிரொலித்த தென்காசி எம்.பி.

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மணிப்பூா் மாநிலத்தில் நிலவும் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு நிலைமை ஆகியவை தொடா்பாக மக்களவையில் தென்காசி திமுக எம்.பி. டாக்டா். ராணி ஸ்ரீகுமாா் தமிழில் எழுப்பி அனைவரது ... மேலும் பார்க்க

தில்லி பட்ஜெட் குறித்து மாணவா்களுடன் ஆலோசனை: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: தில்லியில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஏற்பாடு செய்திருந்த இளைஞா் நாடாளுமன்றத்தில் மாணவா்களுடனான உரையாடிய முதல்வா் ரேகா குப்தா தில்லி பட்ஜெட் குறித்து ஆலோசனைகளை கேட்டறிந்தாா... மேலும் பார்க்க