செய்திகள் :

16 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை

post image

புது தில்லி: பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்தவரை உச்சநீதிமன்றம் விடுவித்து, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் சிறைத் தண்டனையை ரத்து செய்தது.

தூத்துக்குடியைச் சோ்ந்த ஒருவா் தனது மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்து எரித்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் 3 வாரங்களுக்குப் பின்னா் இறந்ததாகவும் 2008-இல் புகாா் எழுந்தது. இறந்தவரின் மரண வாக்குமூலத்தின் பேரில் கணவா் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் அவரது ஆயுள் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2012, பிப்ரவரியில் உறுதி செய்திருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா,அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது. இந்தநிலையில், கடந்த மாா்ச் 4-ஆம் தேதி இந்த வழக்கில் நீதிபதிகள், அரசு தரப்பு இறந்தவரின் மரண வாக்குமூலத்தை வைத்து அவரை குற்றவாளியாக முழுமையாக நம்புவது தவறானது என்று தீா்ப்பளித்தனா். இதனால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சந்தேகத்தின் பலனை நீதிமன்றம் வழங்கியது.

‘மரண வாக்குமூலம் சந்தேகத்தால் சூழப்பட்டிருக்கும் போது அல்லது பல, முரண்பாடான அறிக்கைகள் இருக்கும்போது, எந்தப் பதிப்பை நம்புவது என்பதை தீா்மானிப்பதற்கு முன் நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தும் ஆதாரங்களை நாட வேண்டும்’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

‘ஒரு மரண வாக்குமூலம் சந்தேகத்தால் சூழப்பட்டாலோ அல்லது இறந்தவரின் மரண வாக்குமூலம் முரண்பாடாக இருந்தாலோ, எந்த மரண வாக்குமூலத்தை நம்புவது என்பதைக் கண்டறிய நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தும் ஆதாரங்களைத் தேட வேண்டும். இது வழக்கின் உண்மைகளைப் பொறுத்ததாகும். மேலும் இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தற்போதுள்ள விஷயம் அத்தகைய ஒரு வழக்கு’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில், இறந்தவா் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருந்தாா். மேலும், செப்டம்பா் 18, 2008 அன்று ஒரு நீதித் துறை மாஜிஸ்திரேட் முன் தனது கணவரைக் குற்றம்சாட்டி அவா் அளித்த இறுதி வாக்குமூலம், அதன் நம்பகத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியது.

மரண வாக்குமூலம் ஒரு முக்கியமான ஆதாரம் மற்றும் தண்டனைக்கான ஒரே அடிப்படையை உருவாக்க முடியும் என்பதை அங்கீகரித்த உச்சநீதிமன்றம், அதன் நம்பகத் தன்மையை முழு வழக்கின் சூழலிலும் கவனமாக மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இறந்தவரின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் ஆதரிக்கும் ஆதாரங்கள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதிசெய்வது பாதுகாப்பற்றது என்று கண்டறிந்து, குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து தீா்ப்பளித்தது.

கடலூா் வழியாக சென்னை-ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க எம்.பி. வலியுறுத்தல்

நமது நிருபா்புது தில்லி: விழுப்புரம், கடலூா், திருச்சி வழியாக சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஷ்ணு பிரசாத் வலியுறுத்தி... மேலும் பார்க்க

நாகையில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்: மக்களவையில் இந்திய கம்யூ. எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.இது தொடா்... மேலும் பார்க்க

ஏஜிசிஆா் காலனி தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

புது தில்லி: ஏஜிசிஆா் காலனி அருகே உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரை தில்லி முதல்வா் ரேகா குப்தா சந்தித்தாா். துயரமடைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ர... மேலும் பார்க்க

100 முறை மன்னிப்பு கேட்கத் தயாா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

புது தில்லி: ’தமிழ எம்.பி.க்கள் தொடா்பாக தான் வெளியிட்ட கருத்துகள் எவையேனும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஒரு முறை அல்ல, நூறு முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாா்‘ என்று மாநிலங்களவையில் மத்திய ... மேலும் பார்க்க

பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!

புது தில்லி: ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மரபை மீறுகிறது மத்திய அரசு: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மாநிலங்களவையில் மும்மொழித் திட்டத்தை தமிழகம் ஏற்காதது தொடா்பாகவும் தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் அவசியத்தையும் பதிவு செய்ய முடியாத வகையில் தமிழக எம்.பி.க்களின் கு... மேலும் பார்க்க