வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல்
Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீரர்களின் வாழ்த்துகள்
இந்தியா நியூசிலாந்து இடையே ஆன சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது. இந்த மாபெரும் வெற்றிக்குத் திரைத்துறையினர் மற்றும் இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் & த.வெ.க கட்சி தலைவர் விஜய்:
``சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்".
நடிகர்மோகன்லால்
"சாம்பியன்ஸ் டிராபி நம்முடையது! நீல நிறத்தில் இருக்கும் நம் வீரர்களின் மறக்க முடியாத செயல்திறன்! இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. தேசமே உங்களை நினைத்துப் பெருமைகொள்கிறது".
நடிகர் மகேஷ் பாபு:
"பெருமையில் திளைத்தேன்! சாம்பியன்ஸ் டிராஃபியை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... உண்மையான சாம்பியன்கள்!"
நடிகர் ராம்சரண்:
``நம் வீட்டிற்கு வெற்றியைக் கொண்டு வந்த நமது சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்".

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி வென்றதற்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ," CHAMPIONS TROPHY CHAMPION.... ҮЕЕЕЕЕΗΗΗΗΗ.... " எனப் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.
சவுரவ் கங்குலி:
``இந்தியாவின் அற்புதமான முயற்சி... கடந்த 2 வருடங்களாக உலகத் தொடர்களில் சிறப்பான செயல்திறன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். கேப்டன் ரோஹித் சர்மா மார்வெலஸ்".
வீரேந்திர சேவாக்:
``11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2024 - ல் டி20 உலகக் கோப்பை வெற்றி, அதற்கு 8 மாதங்களுக்குள் மற்றொரு ஐ.சி.சி சாம்பியன் பட்டம். மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி... வாழ்த்துகள் இந்திய அணி".
சுரேஷ் ரெய்னா:
``2013 நினைவுகள் நோக்கி செல்கின்றன! சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் கொண்டு வந்ததற்காக இந்த அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்!".

ஷிகர் தவான்:
"இந்திய அணிக்கு தோல்வியே இல்லாத, ஈடு இணையற்ற, ஒரு அற்புதமான சீசன்! குல்தீப் யாதவ், ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒரு புதிய சாதனையைப் படைத்தனர். ரோகித் முன்னின்று நமக்கு ஒரு சரியான தொடக்கத்தை அளித்தார். முழு அணியும் இன்று ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நீங்கள் உண்மையிலேயே சாம்பியன்கள்!".