மொகலாய மன்னன் ஒளரங்கசீப் கல்லறை அகற்றப்படுமா? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ச...
Virat Kohli: `ஷமியின் தாயார் பாதம் தொட்டு நெகிழ்ந்த விராட் கோலி' - இணையத்தில் வைரலாகும் வீடியோ
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி மூன்றாவது முறையாக (2002-ல் மட்டும் இந்தியாவும் இலங்கையும் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன) மகுடம் சூடியிருக்கிறது. துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் 10 ஓவர்களில் சிறப்பான இன்னிங்ஸை தொடங்கியபோதும், மிடில் ஓவர்களில் இந்திய சுழற்பந்துவீச்சில் சிக்கி பின்னர் ஒருவழியாகப் போராடி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி காட்டினார். இருப்பினும், கோலி 1 ரன்னில் அவுட்டாக அடுத்தடுத்து சீரான இடைவெளியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் திருப்ப முயற்சித்த வேளையில் கே.எல். ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் நிதானமாக ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.
இறுதியில், 49-வது ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அதைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது ஐ.சி.சி கோப்பையை வென்ற உற்சாகத்தில் மைதானம் எங்கும் இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கி தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
முகமது சமியின் தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்கிய விராட் கோலி... ❤❤pic.twitter.com/n4lT0i5AXf
— Devendran Palanisamy (@devpromoth) March 9, 2025
இந்த நிலையில், வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, முகமது ஷமியின் தாயார் பாதம் தொட்டு விராட் கோலி ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷமி தனது தாயாரை விராட் கோலியிடம் அறிமுகப்படுத்த, உடனே கோலி அவரின் காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஷமியின் தாயாருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
