Singer Kalpana: 'அன்னைக்கு நடந்தது இதுதான், ஏன் தேவையில்லாம...' - கொதித்த கல்பனா
ஸ்ரேயா கோஷல் கரியர் பற்றி பரவிய நியூஸ்; 'அது பொய்... உஷாராக இருங்கள்!'- மக்களை எச்சரிக்கும் டி.ஜி.பி
சமீபத்தில், 'பாடகி ஸ்ரேயா கோஷலின் கரியர் முடியப்போவதாகவும், அதற்கு காரணம் அவர் மைக் ஆன் ஆகியிருப்பது தெரியாமல் பேசியதும்' என்ற போஸ்ட் மற்றும் நியூஸ் லிங்க் வைரலாகியது. இப்படி பரவிய இந்த நியூஸ் லிங்க் பிரபல செய்தி நிறுவனத்துடையது போன்று இருந்தது.
அந்தப் போஸ்ட்டுகளும், நியூஸ் லிங்கும் போலியானது என்றும் இந்த வகை மோசடிகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சைபர் க்ரைமின் கூடுதல் டி.ஜி.பி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "வெறும் 10 - 15 ஃபாலோயர்கள் கொண்ட வெரிஃபைட் எக்ஸ் பக்கங்கள் ஸ்ரேயா கோஷல் குறித்த விளம்பரங்களை பரப்பி வருகிறது. அவை மோசடி வலையே. இந்த வலை மூலம் மக்களை ஏமாற்றி சைபர் மோசடியில் விழ செய்ய முயல்கிறார்கள். அதனால், அலர்ட்டாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்.
Verified @X Handles, having 10 to 15 followers, promoting Shreya Ghoshal Ads are scam traps to lure public into cyber scams. Be alert, be safe……. @X should have mechanism to detect and block such handles openly indulging in criminal activities. pic.twitter.com/SW6pOfkuz7
— Dr. Sandeep Mittal, IPS (@smittal_ips) March 5, 2025
எக்ஸ் வலைதளம் இந்த மாதிரி குற்ற செயல்களில் ஈடுபடும் எக்ஸ் பக்கங்களை கண்டுபிடிக்கும் மற்றும் பிளாக் செய்யும் மெக்கானிசத்தை கொண்டிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்ரேயா கோஷல் குறித்து வந்த அனைத்து நியூஸ் லிங்குகளுக்கு மேலும் 'சப்ஸ்கிரைப்' என்ற ஆப்ஷன் உள்ளது. அந்த செய்தியை தெரிந்துகொள்ள அதை கிளிக் செய்து தனது சுய விவரங்களை பதிவு செய்து, பணம் கட்டினால் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும், போனில் இருக்கும் முக்கிய தகவல்களும் திருடப் போக மிக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறுகிறார்கள்.