செய்திகள் :

நிலையற்ற வர்த்தகத்தின் மத்தியில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

post image

மும்பை: ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றத்தின் எதிரொலியாக, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 324.67 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 98.45 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. இந்த போக்கு தொடருமா என்று முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சரிந்து முடிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இண்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ஜொமாட்டோ, டைட்டன், லார்சன் & டூப்ரோ மற்றும் மாருதி சுசூகி இந்தியா ஆகியவை சரிந்தது.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.5 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 2.1 சதவிகிதமும் சரிந்தன. எஃப்.எம்.சி.ஜி தவிர ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், உலோகம், மூலதன பொருட்கள், எண்ணெய் & எரிவாயு, ரியாலிட்டி, பொதுத்துறை வங்கி ஆகியவை 1 முதல் 2 சதவிகிதம் சரிந்து முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4,43,269.25 கோடி ரூபாய் குறைந்து 3,93,85,818.73 கோடி ரூபாயாக உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்திய சந்தையில் சரிவு நீடித்தது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் சியோல் உயர்ந்தும் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்ந்து முடிந்தது.

இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,035.10 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,320.36 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.51 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 70 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!

தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 4% சரிவு!

புதுதில்லி: இண்டஸ்இண்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக, ஒரு வருடமாக நீட்டிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்ததை அடுத்து, இந்துஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 4 சதவி... மேலும் பார்க்க

உயர்ந்து முடிந்த சன் பார்மா பங்குகள்!

புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த, 'செக்பாயிண்ட் தெரபியூடிக்ஸ்' நிறுவனத்தை, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 355 கோடி டாலருக்கு வாங்க உள்ளதாக அறிவித்தையடுத்து அதன் பங்கின் விலை 0.13% உயர்ந்த... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.87.33-ஆக முடிவு!

மும்பை: உலகெங்கிலும் நிச்சயமற்ற கட்டண தன்மைக்கு மத்தியில் நிலையற்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய நிதியின் தடையற்ற வெளியேற்றம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா குறை... மேலும் பார்க்க

தங்கம் விலை சற்று உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 64,320-க்கு விற்பனை... மேலும் பார்க்க

டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 7வது வாரமாகத் தொடர்ந்து சரிந்துள்ளது. டெஸ்லாவின் மதிப்பு கடந்த வாரத்தில் 10% சரிந்த நிலையில், இதுவரை 800 பில்லியன் டாலர் (6.9... மேலும் பார்க்க

இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!

நொய்டா: ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.வீட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹையர், புதிய ஏசி உற்பத்தி மற்றும் ... மேலும் பார்க்க