பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை: பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கி...
இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.87.33-ஆக முடிவு!
மும்பை: உலகெங்கிலும் நிச்சயமற்ற கட்டண தன்மைக்கு மத்தியில் நிலையற்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய நிதியின் தடையற்ற வெளியேற்றம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா குறைந்து ரூ.87.33 ஆக இன்று முடிவடைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.24 ஆக தொடங்கி, வர்த்தக அமர்வின் போது, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.36 ஆகக் குறைந்தது, வர்த்தக நேர முடிவில் 38 காசுகள் சரிந்து ரூ.87.33 ஆக நிலைபெற்றது.
முன்னதாக, பிப்ரவரி 5 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 39 காசுகள் காசுகள் சரிந்து செங்குத்தான இழப்பை பதிவு செய்தது.
அந்நிய செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.86.95-ஆக இருந்தது.
இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தின் மத்தியில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!