செய்திகள் :

பள்ளிக் காதலால் சந்தேகம்; மனைவியை சிக்கவைக்க விஷம் குடித்த புது மாப்பிள்ளை பலி - நடந்தது என்ன?

post image

கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கலையரசனின் தந்தை சுந்தரமூர்த்தி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்திருக்கும் புகார் மனுவில், `என் மகனுக்கும், பிரியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால் வேறு நபரை காதலித்து வந்த அந்தப் பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அதனால் அந்தப் பெண்ணை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். ஆனால் அந்தப் பெண்ணின் வீட்டார் அவரை சமாதானப்படுத்தி எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தப் பெண் என் மகனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார்.

உயிரிழப்பு

`விஷம் கொடுக்கப்பட்டதா?’

அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கலையரசன், ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தன்னுடைய மனைவிதான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறியிருந்தார். ஆனால் அந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசிய புதுச்சத்திரம் போலீஸார், ``மனைவி தன்னை மதிக்கவில்லை என்றும், தன்னுடன் வாழவில்லை என்ற விரக்தியில் இருந்த கலையரசன், சுடுகாட்டுப் பகுதியில் அமர்ந்து அவரேதான் விஷம் குடித்திருக்கிறார்.

தான் விஷம் குடித்துவிட்டதாக நண்பர்களிடமும் செல்போனில் பேசியிருக்கிறார். விஷம் குடித்த பாட்டிலும் அவருடைய இருசக்கர வாகனத்தில்தான் இருந்தது. கலையரசனின் செல்போன் உரையாடல்கள், சி.சி.டி.வி காட்சி உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றி விட்டோம்.

தன்னை மதிக்காத மனைவியை பழிவாங்குவதற்காகவே கலையரசன் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். விசாரணை முடிவில் அனைத்தையும் வெளியிடுவோம்” என்று கூறியிருந்தனர்.

இதுகுறித்து மார்ச் 2-ம் விகடன் இணையப்பக்கத்தில் `மனைவி விஷம் கொடுத்ததாகக் கணவன் புகார் – நடந்தது சம்பவமா... நாடகமா?’என்ற தலைப்பில் எக்ஸ்க்ளூசிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கலையரசன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது, ``முதலிரவு அன்று திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாக மனைவியிடம் கூறிய கலையரசன், அந்தப் பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தியிருந்ததையும் கூறியிருக்கிறார்.

விஷம்

அதையடுத்து, `நீ அப்படி யாரையாவது காதலிக்கிறாயா?’ என்றும் கேட்டிருக்கிறார். கணவரே உண்மையைக் கூறுகிறாரே என்று நினைத்த பிரியா, பள்ளியில் படிக்கும்போது தன்னை ஒருவர் காதலித்ததாக தெரிவித்திருகிறார். அதிலிருந்து  மனைவி மீது சந்தேகப்பட ஆரம்பித்த கலையரசன், அவரிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறார். அதன் காரணமாகவே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த கலையரசன், அதன்பிறகு அவரது நண்பர் சுபாஷிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

இது கலையரசனின் உறவினர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த வழக்கில் கலையரசனின் மனைவியை சிக்க வைக்க நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் கலையரசன் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் நாடகம் ஆடுகிறார்கள். இது தொடர்பான ஆடியோ, வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்” என்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ஸ்ரேயா கோஷல் கரியர் பற்றி பரவிய நியூஸ்; 'அது பொய்... உஷாராக இருங்கள்!'- மக்களை எச்சரிக்கும் டி.ஜி.பி

சமீபத்தில், 'பாடகி ஸ்ரேயா கோஷலின் கரியர் முடியப்போவதாகவும், அதற்கு காரணம் அவர் மைக் ஆன் ஆகியிருப்பது தெரியாமல் பேசியதும்' என்ற போஸ்ட் மற்றும் நியூஸ் லிங்க் வைரலாகியது. இப்படி பரவிய இந்த நியூஸ் லிங்க் ... மேலும் பார்க்க

5 கொரிய பெண்கள்; Excel Sheet, ரகசிய கேமரா- ஆஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி!

ஆஸ்திரேலியாவில் ஐந்து தென்கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பாலேஷ் தன்கர். இந... மேலும் பார்க்க

திருப்பதி கோயில் வீடியோ விவகாரம்: TTF வாசனின் வங்கி கணக்கு முடக்கம்

டி.டி.எஃப் வாசன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தனது வீடியோக்கள், செயல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகிறார் டி.டி.எஃப் வாசன். கடந்த ஆண்டு, ஜூலை மாதம் திருப்பதிக்கு சென்றிருக்கிறார் ... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்பு; பின்னணி என்ன?

வழக்கின் தன்மை, ஆவணங்களை மட்டும்தான் நீதிமன்றம் பார்க்கும், அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மாநில நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொ... மேலும் பார்க்க

Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸ... மேலும் பார்க்க