தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள்...
மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்
பிரதமரின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மாநிலம் முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளதாக மகாராஷ்டிரம் துணை முதல்வர் அஜித் பவார் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
2047-ஆம் ஆண்டுக்குள் பிரதமர் மோடியின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கும். வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.
டாவோஸில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் 56 நிறுவனங்கள் ரூ.15.72 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளைக் கொண்டுவந்து 16 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பவார் கூறினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரம் 15.4 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. மும்பை பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையம்) மகாராஷ்டிரத்தின் வளர்ச்சி மையமாக மாற்றப்படும், பல்வேறு ‘இடங்களிற்கு ஏழு வணிக மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
முன்னதாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில பட்ஜெட் மக்களை மையமாகக் கொண்டிருக்கும் என்றும், ஆளும் மகாயுதி அரசு மக்களுக்கு உறுதி பூண்டுள்ளது என்றும் கூறினார்.
பட்ஜெட் மக்களுக்கானது, இந்த அரசும் மக்களுக்கானது. இந்த இரண்டரை ஆண்டுகளில் நாங்கள் மக்களுக்காக உழைத்தோம். மக்களின் முன்னேற்றத்திற்காக, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்திற்காக நாங்கள் உழைத்தோம். அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் இதே போன்ற பணிகள் செய்யப்படும்.
புதிதாக அமைக்கப்பட்ட மகாயுதி அரசின் நிதியமைச்சராக உள்ள பவாரின் 11வது பட்ஜெட் இதுவாகும். சேஷ்ராவ் வான்கடே 13 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அஜித் பவார் 11 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து இரண்டாவது அதிகபட்ச சாதனையைப் பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து ஜெயந்த் பாட்டீல் (10 முறை) மற்றும் சுஷில்குமார் ஷிண்டே (9 முறை) பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடையவுள்ளது.