வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனை...
சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!
சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக சோப்பு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சோப்புகளின் விலையை உயர்த்த ஹிந்துஸ்தான் யூனிலெவர்(டவ் சோப்பு), கோத்ரேஜ் கன்ஸியூமர்(சிண்தால்) உள்ளிட்ட பல முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. எனினும், விலையேற்றம் உடனடியாக அமலுக்கு வராதெனவும் நிறுவனங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.