செய்திகள் :

கூட்டணி வியூகமா? வைத்திலிங்கத்துடன் சசிகலா, தினகரன், திவாகரன் சந்திப்பு!

post image

ஓ.பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தின் உடல்நிலை குறித்து விசாரித்த நிலையில், இந்த சந்திப்பு அனைத்தும் கலந்ததாக இருந்ததாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஓ. பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் சசிகலா பேசியதாவது,

அதிமுக ஏழை மக்களுக்கான கட்சி. தலைவர் (எம்.ஜி.ஆர்.) ஆரம்பித்தது. அதுவும் மக்களுக்காக ஆரம்பித்தது. திமுக போன்று அல்ல நாங்கள். எங்கள் நிறுவனத் தலைவரே மக்களாட்சி என்றுதான் குறிப்பிட்டார். அதே வழியில்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் பின்பற்றினார்.

2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்ல ஆட்சியை நாங்கள் தருவோம். அது மக்களுக்கானதாக இருக்கும்.

அதிமுக இணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்த சசிகலா, தனியொரு நபர் முடிவு செய்ய முடியாது. அடிமட்டத் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது: தவெக விமர்சனம்!

மதநல்லிணக்கம் தொடர்பான திமுக அரசின் சாயம் வெளுப்பதாக தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது. மதுரையில் மதநல்லிணக்கப் பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்தது குறித்து தவெக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர... மேலும் பார்க்க

திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராசர் பெயர்: தமிழக அரசு அறிவிப்பு!

திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" எனப் பெயரிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்ச... மேலும் பார்க்க

எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500 மானியம், படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை என பாமகவின் நிழல் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள... மேலும் பார்க்க

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல: சீமான்

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.திமுகவுக்கான எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது ... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்!

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட... மேலும் பார்க்க

யார் அந்த சூப்பர் முதல்வர்?

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியிருப்பது விவாவதப் பொருளாகியுள்ளது.தேசிய ... மேலும் பார்க்க